ஜுன் 20

img

இந்நாள் ஜுன் 20 இதற்கு முன்னால்

1944 - முதன்முறையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று புவியைக் கடந்து விண்வெளியை எட்டியது. வஞ்சம்தீர்க்கும் ஆயுதம் என்ற வரிசையில் ஜெர்மனி உருவாக்கிய முதல் ஆயுதம்தான் உலகின் முதல் ஏவுகணை(இத்தொடரில் 2019 ஜூன் 19இல்). அதில் இரண்டாவதான வி-2தான் உலகின் முதல் நீண்டதொலைவு, வழிநடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை. வெர்னெர்-வோன்-ப்ரான் உருவாக்கிய ஏ-4 ராக்கெட்டே வி-2 ஏவுகணையாகப் பயன்படுத்தப்பட்டது.